ஈரோடு சோலாரில் உலக நன்மை வேண்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்
ஈரோடு சோலாரில் உலக நன்மை வேண்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.! ஈரோடு மாவட்டம், சோலார் புதிய பேருந்து நிலையம் பின்புறம் நடந்த கந்தூரி காடு விழாவில், தற்போது மழைக்காலத்தில் பரவி வரும் நோய் நொடிகளில் இருந்து மக்களைக் காக்க வேண்டியும், உலக நன்மை வேண்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கூட்டுப் பிரார்த்தனையில் (09/12/2024) ஈடுபட்டனர். ஈரோடு நகரில் கடந்த 150 ஆண்டுகளுக்கு முன்னர் பரவிய காலரா தொற்றால் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். அந்த காலகட்டத்தில் ஈரோடு டவுன் காவல் நிலையம் எதிரே உள்ள பெரிய பள்ளிவாசலில் இமாமாக இருந்த பிலால் என்பவர், எல்லோரும் ஒருநாள் ஊரை விட்டு காலி செய்து, எல்லையில் கூடாரம் அமைத்து தங்குங்கள். அங்கேயே சமைத்து சாப்பிட்டு, அனைத்தையும் ஏழை மக்களுக்கு தானம் அளித்துவிட்டு இறைவனை தொழுது, கூட்டு பிரார்த்தனை நடத்துங்கள் எனக் கூறியுள்ளார். இதன்படி, அனைவரும் ஒரு நாள் வீடுகளை காலி செய்து விட்டு ஈரோடு நகரில் இருந்து 12 கிலோ மீட்டர் தள்ளியுள்ள லக்காபுரம் காவிரி ஆற்றங்கரை அருகே, காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் தங்கி, கூட்டுப் பிரார்த்தனை ச...